Tuesday, July 28, 2015
ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று ஹெவ்லொக் மைதானத்தில் வெளியிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.
'நட்புறவான இனம், நவீன தேசம் மற்றும் சினேகபூர்வ சமூகத்திற்கான எதிர்காலத்தை உறுதிசெய்வோம்" என்ற பன்னிரு கொள்கை அம்ச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின், பொதுத் தேர்தலுக்கான 'தேர்தல் விஞ்ஞாபனம்" ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்று காலை ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்று அதனை கையளித்துள்ளனர்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் வைத்து வெளியிடப்பட்டது..

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை
ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல்
மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் "எதிர்காலத்திற்கான உத்தரவாதம்" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்றுகாலை வௌியிட்டு வைக்கப்பட்டது.
இதில் உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ,
செயலிழந்திருந்த நாட்டை செயல்படக்கூடிய நாடாக தாம் மாற்றியமைத்ததாக தெரிவித்தார்.
நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வியாபாரிகளுக்கு பல சலுகைகள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக 50,000 ரூபா வரையில் வழங்குவதாகவும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபா வரையில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தை 6,000 ரூபாவாக உயர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 25,000 ரூபாவாக உயர்த்துவதுடன் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 3,000 ரூபாவினால் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படுவதுடன், அனைத்து வீடுகளுக்கும் ப்ரோட்பேண்ட் (Broadband) வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதனூடாக இளைஞர் யுவதிகளை இணைய யுகத்திற்கு அழைத்துச்செல்ல எதிர்பாரப்பதாகவும், அவர்களின் பங்களிப்புடன் நாட்டை நவீன யுகத்தை நோக்கி பயணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிடும் இன்றைய நிகழ்வில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment