Tuesday, July 28, 2015

நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!

Tuesday, July 28, 2015
நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரியவர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment