Tuesday, July 28, 2015
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக்
கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குற்றம்
சுமத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கங்கள் நிறைவேற்றப்பட்டால் ஆயிரக் கணக்கான படைவீரர்களின் உயிர்த்தியாகத்துடன் மீட்கப்பட்ட நாட்டை காட்டிக் கொடுப்பதாக அமைந்து விடும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்குவது என்பது, நாட்டை தட்டு ஒன்றில் வைத்து பிரிவினைவாதிகளிடம் ஒப்படைப்பதற்கு நிகரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.இந்த உடன்படிக்கையை இரண்டு தரப்புக்களும் நாடடு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைத்தல், புலி பயங்கரவாதச் சந்தேக நபர்களை விடுதலை செய்தல், சுய நிர்ணய ஆட்சி முறைமையை உருவாக்குதல், ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் ஏனைய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment