Tuesday, July 28, 2015
எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிட்டு பலியான முதலாவது இலங்கையர் என்று
கருதப்படும் கலேவெல பிரதேசத்தைச் சேர்த முஸ்லி லிலம்தன் என்பவரின் மனைவி
உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் அமைப்பில் அபு சயிலானி என அறியப்பட்ட முஸ்லி லிலம்தன், சிரியாவில் வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவரது தேசிய அடையாள அட்டையின் தகவல்களின் படி, காவல்துறையினர் அதன் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த விசாரணையின் மூலம், குறித்த இலங்கை ஜ.எஸ் தீவிரவாதியின் மனைவி மற்றும் 5 பிள்ளைகள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளமை தெரியவந்தது.
37 வயதான இவரின் பிறந்த ஊர் கண்டி - வெருல்லகம என்பதுடன், அவரின் மனைவி கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் அறியப்பட்டுள்ளது.
முஸ்லி லிலம்தன் என்ற இவர் கலேவெல பிரதேசத்தின் தேசிய பாடசாலை ஒன்றில் அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு டிசம்பர் பாடசாலை விடுமுறையின் போது, இவர்கள் யாத்திரை செல்வதாக கூறி அவர் அதிபர் பதவியில் இருந்து விலகிச் சென்றதாக குறித்த பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment