Tuesday, July 28, 2015

ஐ.ம.சு.முவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

Tuesday, July 28, 2015
ஐ.ம.சு.முவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை 9.00 மணிக்கே வெளியிடப்படும் என ஶ்ரீ.ல.சு.கவின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜோதிடர்கள் குறிப்பிடதற்கமையவே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.ம.சு.முவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான குருநாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதுடன் இதற்கு முன்னர் கொழும்பு 7 பகுதியில்   மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறவுள்ளதுடன், அங்கிருந்து கட்சி ஆதரவாளர்களுடன் அவர் மைதானம் வரை பேரணியாகச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டுக்கு உயிரூட்டுவோம் புதிதாக ஆரம்பிப்போம்” எனும் தொனிப் பொருளில் வெளியிடப்படவுள்ள கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
சகல இனங்களையும் வாக்குறுதிகளை உள்ளடக்கியதாக அமையவுள்ள இந்த விஞ்ஞாபனம் ஹென்றி பேதிரிஸ் அரங்கில் வெளியிடப்படவுள்ளது. ‘நாட்டை மீள்நிர்மாணித்து – புதிதாக ஆரம்பிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ்விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்...

எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 மாவட்டங்களில் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 120க்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கும். பிரதமராக மகிந்த ராஜபக்ச கட்டாயம் நியமிக்கப்படுவார்.

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் ஒரு ஐ.ஆர்.சி காரன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடயத்தை நீதிமன்றம் தீர்மானிக்கும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment