Tuesday, July 28, 2015
நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 17ஆம் திகதி மஹிந்தவை பிரதமராக்குவோம்: முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ!
பெலியத்தை நகரில்
ஞாயிறன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, நான் மீண்டும் அந்தக் கதிரைக்கு
செல்லமாட்டேன். நான் இன்று இந்த மேடைக்கு வருகை தந்தது உங்கள் முன்
உரையாற்றுவதற்கு அல்ல, எனது முகத்தை உங்களுக்கு காண்பிப்பதற் காகவே.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 17ஆம் திகதி மஹிந்தவை பிரதமராக்குவோம்.
ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப் படுகின்றன. ஆனால் இவற்றில் எவ்வித உண்மையுமில்லை. நாம்
மேற்கொண்ட அபிவிருத்திகள் அனைத்தும் இடையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
இவற்றை முன்னெடுத்து மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம்
அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment