Tuesday, July 28, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பினால்
முன்வைக்கப்பட்டுள்ள சமஷ்டி கோரிக்கையை நிராகரிப்பதாக ஜே.வி.பி
தெரிவித்துள்ளது. அதன் ஊடக செயலாளர் விஜிதஹேரத் இதனை தெரிவித்துள்ளார்
சமஸ்டி கோரிக்கையை முன்வைத்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தால் கட்சியும் அதன் வேட்பாளர்களும் நன்மையடைய கூடும்,அவர்கள் எதிர்வரும் பொதுதேர்தலில் இனவாதத்தை பயன்படுத்துகின்றனர்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வாக தமிழ்தேசியகூட்டமைப்பு சமஸ்டியை முன்வைப்பதை
ஜே.வி.பி எதிர்க்கின்றது,நாங்கள் சமஸ்டியை எதிர்க்கின்றோம், தமிழ் மக்களின்
துயரங்களிற்கு முடிவைக் காணகூடிய தீர்வொன்று அவசியம் என்பதனை நாங்கள்
ஏற்றுக்கொள்கிறோம், அதேவேளை அது சம்ஸ்டி தீர்வு என்பதை நாங்கள்
ஏற்றுக்கொள்ள தயாரில்லை,அதேபோன்று வடக்குகிழக்கை இணைப்பதும் ஓரு
தீர்வல்ல,இந்திய இலங்கை ஓப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்குகிழக்கை
பிரிக்கவேண்டும் என நாங்களே நீதிமன்றம் சென்றோம்.
சமஸ்டி தீர்வு நாட்டை பிளவுபடுத்தும்,தங்களுடைய வாக்குகளை அதிகரிப்பதே தமிழ்தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என்பது தெளிவாக புரிகின்றது,ஆனால் இனவாதத்தை பயனபடுத்துவது ஐக்கியமின்மைக்கும் இரத்தக்களறிக்கும் வழிவகுக்கும் என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment