Thursday, July 02, 2015
நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்து மிகவும் கவனத்துடனே மஹிந்த தேர்தலில் களமிறங்க வேண்டும். என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
யார் என்ன சொன்னாலும் மக்கள் இன்றும் மஹிந்தவின் பக்கமே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அந்த வேலைத்திட்டத்தில் மஹிந்த எனக்கும் அழைப்பு விடுத்தால் நான் அந்த காரியத்தில் என்னையும் இணைத்துக்கொள்வேன்.
மக்கள் எப்போதும் அவர் பக்கம் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் தீர்மானங்களும் மக்களை பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
இன்று நடைமுறையில் இருக்கும் அரசாங்கம் மிகவும் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.
பெரும்பான்மை ஆதரவு எதிர்க்கட்சி பக்கம் இருக்கையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. ஒரு சிலரின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் முழு நாட்டையும் பாதாளத்தில் தள்ளியுள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறானதொரு ஆட்சி நடக்கவில்லை.
ஒரு ஆட்சி எவ்வாறு அமையக் கூடாது என்பதற்கு உலக நாடுகள் அனைத்துக்கும் இலங்கை நல்லதொரு உதாரணமாகும்.
எமக்கு தோல்வி என்பது புதிதல்ல. ஆனால் இன்று நாட்டில் பலமான எதிர்க்கட்சி இல்லாமல் போயுள்ளமையே எமக்கு மிகப்பெரிய தோல்வியாக மாறியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 62 இலட்சம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமே. ஆனால் 58 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்தை எதிர்த்துள்ளனர். அந்த மக்கள் இன்று அனாதரவாகிவிட்டனர். அந்த மக்களை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகின்றது.
யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பாகும். ஜனாதிபதித் தேர்தலில் 58 இலஞ்சம் மக்கள் மஹிந்தவை ஆதரித்தமை மக்களின் தவறு அல்ல. அது மக்களின் விருப்பமாகும். ஆகவே அதை இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கத்தில் கையாளக் கூடாது.
அவ்வாறு செயற்படுவது மீண்டும் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். ஆட்சி மாறலாம் தலைமைத்துவம் கைமாறலாம். ஆனால் வென்றெடுத்த நாட்டின் விடுதலை மீண்டும் சிதைவடைந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment