Thursday, July 2, 2015

Former President Mahinda makes a special statement!!! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பு !




Thursday, July 02, 2015
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பங்குகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரீ.பி ஏக்கநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று முதல் முறையாக மெதமுலனவில் வைத்து அறிவித்தார்.

எனினும் தாம் எந்த கட்சியின் போட்டியிடுவேன் என்று அவர் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9ஆம் திகதி அநுராதபுரத்தில் தமது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளார் என முன்னாள் அமைச்சர் ரீ.பி ஏக்கநாயக்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
            

No comments:

Post a Comment