Wednesday, July 1, 2015

இந்தோனேஷிய ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு!

Wednesday, July 01, 2015
இந்தோனேஷிய ராணுவ விமான விபத்தில் அதில் பயணம் செய்த 113 பேரும் பலியாகிவிட்டதாக ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 12 விமான குழுவினர் மற்றும் 101 பயணிகளுடன் Hercules C-130 என்ற ராணுவ விமானம் நேற்று புறப்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ தொலைவு பறந்ததும் அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பியுள்ளது.

ஆனால், எதிர்பாராத விதமாக விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுமத்திரா நகருக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டல் மீது பலமாக மோதி வெடித்துச் சிதறியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவ அதிகாரிகள், இதுவரை 49 நபர்களிடன் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தோனேஷிய ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 122 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் Hercules C-130 என்ற ராணுவ விமானம் நேற்று புறப்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ தொலைவு பறந்ததும் அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பியுள்ளது.

ஆனால், எதிர்பாராத விதமாக விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுமத்ரா நகருக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டல் மீது பலமாக மோதி வெடித்து சிதறியது. இதில் விமானத்தின் வால் பகுதி தவிர மற்ற பகுதிகள் உருகுலைந்து விட்டது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இதுவரை 141 உடல்களை மீட்டுள்ளனர், 45 நபர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 9 பேர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment