Friday, June 19, 2015

உண்மையான ஸ்ரீ.ல.சு கட்சியினர் எம்முடன்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Friday, June 19, 2015
உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தம்முடனே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
கண்டியில் இன்று மதவழிபாடுகளில் ஈடுபட்ட அவர், பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
 
உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களே தம்வசம் இருக்கின்றனர்.
கட்சியை விட்டுச் சென்ற தலைவர் என்று தம்மை மாத்திரமே குறைகூறமுடியாது.
கட்சியுடன் இணைந்த நாள் முதல்  அதே கட்சியிலேயே இருந்து வருகிறேன்.
 
எனது வயதை கவனத்தில் கொண்டு தம்மை பாட்டன் என சிலர் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.....

 
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை படுகொலை செய்வதற்கான சதித்திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக மக்கள் ஊடக இயக்கமென்ற அமைப்பொன்று இன்று மீண்டும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிமால் வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸ்- மா- அதிபரிடம் இது குறித்து முறைப்பாடு செய்தோம், குறிப்பிட்ட முறைப்பாட்டை விசேட விசாரணை பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியை கொலைகாரன் என பிழையாக சித்தரிக்கின்றனர்,நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ரமநாயக்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து முழுமையான அறிக்கையொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம்,

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 300 உறுப்பினர்களை விடுதலை செய்து சமுகத்தில் நடமாட விடப்போவததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். டீன அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment