Saturday, June 20, 2015
வாஷிங்டன்:இலங்கை அரசால் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக கூறப்படும் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்புகளும் நிதி பரிவர்த்தனைகளும் இன்னும்
உயிர்ப்புடன்தான் உள்ளன என அமெரிக்காவில் உள்நாட்டு தீவிரவாதம் தொடர்பான
ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்நாட்டு தீவிரவாதம்- 2014 என்ற தலைப்பில் நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 'உச்சகட்டப் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவிலான எந்த தாக்குதல்களையும் புலிகள் நடத்தவில்லை.
எனினும், இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட புலி இயக்க ஆதரவாளர்களில் 13 பேர் கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் நிதி உதவிகளை செய்து வருவதாக கருதப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 422 தனிநபர்களை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் பட்டியலில் இணைத்து கடந்த (2014) ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment