Friday, June 19, 2015

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் மிகவும் முக்கியமானவை: சபாநாயகர் சமால் ராஜபக்ஸ!

Friday, June 19, 2015      
சீன ஊடகமொன்று அண்மையில் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தலைமுறைகளாக மிகச் சிறந்த உறவு நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றதாகவும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு காத்திரமான பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
1952ம் ஆண்டு சீன - இலங்கை அரிசி ஒப்பந்தம் இலங்கையின் அபிவீருத்திக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டு கால யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பித நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கியதுடன் முதலீடுகளையும் செய்திருந்ததாகவும் அதன் பின்னர் நாட்டில் பாரியளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment