Friday, June 19, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு
முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக முன்னாள் கல்வி
அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் நிறுவப்படும் புதிய அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபாயாராமயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து நிறுவப்படும் காபந்து அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமராக பதவி வகிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
2005 மற்றும் 2010ம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இருந்த ஆதரவினை விடவும் தற்போது பல மடங்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment