Thursday, June 25, 2015
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் புதிய
அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில்
தற்போது குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரலந்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்...
தமது ஆட்சி காலத்தினுள் அபிவிருத்திகள் முன் எடுக்கப்பட்டதுடன் அரச
சேவையாளர்களுக்கு உரிய காலத்திற்கு வேதனம் வழங்கப்பட்டதாக முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் வெலிமட - பொரலந்த ஸ்ரீ சுதர்ஷனாராமயில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment