Thursday, June 25, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை
மக்கள் இன்னமும் விரும்புவதாக முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன
தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை கட்சிக்குள் உள்ளீர்க்கும் இறுதி
முயற்சியாககக் கூட இது இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்கு சேவையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு சில சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளராக கடமையாற்றி வரும் ராஜித சேனாரட்ன எந்த பொறுப்புணர்வும் அற்ற ஓர் நபர் எனவும் கருத்துக்களை வெளியிடும் போது உண்மையை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதித்தாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment