Wednesday, June 3, 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக போட்டி: வாசுதேவ நாணயக்கார !

Wednesday, June 03, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்படாவிட்டாலும், மஹிந்த வேறும் கட்சியின் ஊடாக பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விரும்புகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் வேறும் வழிகளில் போட்டியிடுவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான கட்சிகள் மஹிந்தவை ஆதரிப்பதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது நூற்றுக்கு நூறு வீதம் உறுதி எனவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
 
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும்பான்மை பாராளுமன்ற உறப்பினர் முன்னாள் ஜனாதபிதியுடன் இணைந்து கொள்வார்கள் எனஅவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment