Wednesday, June 03, 2015
தற்போதைய பாராளுமன்றை கலைக்குமாறு சபாநாயகர் சமால் ராஜபக்ஸ யோசனை ஒன்றை பாராளுமன்றில் முன்வைத்துள்ளார். இன்று காலை பாராளுமன்றம் கூடிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது, பாராளுமன்றைக் கலைக்குமாறு ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். அதன் பின்னர் பாராளுமன்றைக் கலைக்க விரும்புபவர்கள் எழுந்து நிற்குமாறு அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எழுந்து நின்றனர். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, வாசுதேவ நாணயக்கார, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச ஆகியோர் எழுந்து நிற்கவில்லை.
No comments:
Post a Comment