Tuesday, June 02, 2015
டெல்லி:தங்களது ராணுவ பலத்தை அதிகரித்து அண்டை
நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சீனா நாட்டின் கடற்படைக்கு
சொந்தமான அணு ஆயுதங்களுடன் கூடிய நவீன நீர்மூழ்கி கப்பல்கள்
இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக இந்திய
ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள்
கிடைத்துள்ளன.
தற்போது, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட கடற்பகுதிக்குள் சீன நீர்மூழ்கி கப்பல்கள் ஏதும் காணப்படவில்லை. எனினும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிழல் யுத்தமாக (கோல்ட் வார்) இதுபோன்ற முயற்சிகளில் சீனா விரைவில் ஈடுபடலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்திய கடற்படையினரை உஷார் நிலையில் இருக்குமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
நமது சந்தேகத்துக்கேற்ப, இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக கூறிக் கொண்டு, இந்தியாவை ஒட்டிய கடற்பகுதிக்குள் அவ்வப்போது சீன கடற்படையை சேர்ந்த அணுஆயுதம் தாங்கிய நவீன நீர்மூழ்கி கப்பல்கள் அவ்வப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment