Tuesday, June 02, 2015
தமது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதிகளை முடக்கியதனால் மூன்று நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிரிலிய சவிய என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை சிராந்தி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்த நிறுவனத்தின் நிதியை முடக்கியிருந்தனர்.
இந்த நிறுவனம் தொடர்பில் சிராந்தி ராஜபக்ஸ இன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.உள்நாட்டு வெளிநாட்டு உதவி வழங்குனர்களின் நிதி உதவியின் அடிப்படையில் இந்த நிறுவனம் இயங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்திற்கு அரச பணமோ சொத்துக்களோ பயன்படுத்தப் படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நிறுவனத்தின் பண உதவியை பெற்றுக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு அறியக் கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தமதும் ஏனைய இரண்டு உறுப்பினர்களினதும் விபரங்களை வழங்கி வங்கியில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டதாகவும், கணனியில் பதிவு செய்த போது அடையாள அட்டை இலக்கங்கள் தவறாக பதியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment