Sunday, May 17, 2015

போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில்!

Sunday, May 17, 2015
போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. தாய்நாடு அமைப்பு என்ற அமைப்பே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.
 
இந்த அமைப்பு அண்மையில் அரசியல்வாதிகள் மற்றும் தென்னிலங்கை புத்திஜீவிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.இந்தநிலையில் இந்த அமைப்பு மே 8ம் திகதி முதல் போர் வெற்றி வாரத்தை அறிவித்தது.
 
இந்த அமைப்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை புலம்பெயர்ந்த புலிகளின் ஆதரவு தமிழர்களாலும், சர்வதேச நாடுகளாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் கீழ் உண்மையான சமாதானத்தை பெறமுடியாது என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment