Sunday, May 17, 2015

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!

Sunday, May 17, 2015
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு குறைந்தது 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் டி எம் ஜெயரத்ன செயலாளராக இருக்கும், மக்கள் கூட்டமைப்பு கட்சியின் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
 
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் புதிய முன்னணி ஒன்றை அமைத்து அதன்கீழ் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
 
இவர்கள் ரணிலையே அல்லது மஹிந்தவையே ஆதரிக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
ஒருவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே இந்த அடிப்படை உரிமை மீறல்  மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஸ்ட அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில் அநாமதேய முறைப்பாடுகளின் அடிப்படையில் நிதி மோசடி விசாரணைப்பிரிவு, எதுவித விசாரணைகளும் இன்றி இப்பிரச்சனையை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment