Sunday, May 17, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தல் ஜுன் மாதம் இடம்பெறும்: சுசில் பிரேமஜயந்த!

Sunday, May 17, 2015
எதிர்வரும் பொதுத் தேர்தல் ஜுன் மாதம் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொலன்னறுவையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்காக ஆயத்தமாகுமாறும், தேர்தலுக்காக ஒன்றிணைந்து அனைவரும் செயற்படுமாறும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எப்படியிருப்பினும் இவ்வாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த மாதம் தேர்தல் இடம்பெற வேண்டும்.
 
அதற்கமைய ஜுன் மாதம் தேர்தல் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment