Sunday, May 17, 2015
புதிய அரசாங்கத்தில் அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜங்க அமைச்சர் பதவிகளை வகிக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 26 பேரில் 16 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தை அடுத்த வாரத்தில் எடுக்கவிருப்பதாகவும் அவர்களின் வாக்காளர்கள் அழுத்தத்தின் காரணமாகவே இந்த 16பேரும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment