Friday, March 27, 2015
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து
டென் சாய் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரவு
10.15 மணியளவில் அயுத்தயா மாகாணத்தில் சென்ற போது நின்று கொண்டிருந்த
மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் பாங்காக்–டென்காய் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.
இந்த
விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 52 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6
பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2
பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டினர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை சேர்ந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கியுள்ளனர்.