Friday, March 27, 2015
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை
நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்
பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து
நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள்
உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர்.
விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் பதிவான குரலை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பூட்டப்பட்ட விமானியறையை வேகமாக தட்டியபடி கதவை திறக்க சொல்லும் ஒரு விமானியின் குரல் பதிவு கிடைத்துள்ளது.
அதாவது காக்பிட்டில் இருந்து விமானி வெளியே சென்ற சமயம் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததும், அப்போது துணை விமானி லுபிட்ஸ் மட்டுமே உள்ளே இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விமானி காக்பிட் அறையைத் திறக்கும்படி பலமுறை கதவைத் தட்டியும் துணை விமானி லுபிட்ஸ் திறக்காததால், அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் விமானத்தை மோதியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், காக்பிட்டில் இருந்த துணை விமானி லுபிட்ஸ் கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஜெர்மன் பில்டு டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர்களிடம் தொடர்ந்து உளவியல் ஆலோசனை பெற்று வருவதாகவும் பில்டு டெய்லி கூறியுள்ளது. ஜெர்மன் விமான போக்குவரத் ஆணையத்திடம் இருந்து பெற்ற ஆவணங்களை சுட்டிக்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பயிற்சியின்போது அந்த துணை விமானி லுபிட்ஸ் குறிப்பிட்ட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், 2013ல் அவர் மீண்டும் ஏர்பஸ் ஏ320 விமானத்தை இயக்குவதற்கு தகுதி பெற்றதாகவும் லூப்தான்சா தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே, மன அழுத்தத்தில் இருந்த அவரால் எப்படி விமானத்தை சரியாக இயக்க முடியும்? அவருக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என்று புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

No comments:
Post a Comment