Tuesday, January 6, 2015

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது வெளிநாடுகளிடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை எதிரணிக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது: விநாயகமூர்த்தி முரளிதரன்!

Tuesday, January 06, 2015
இலங்கை::தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது வெளிநாடுகளிடம் பணத்தைப்பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை எதிரணிக்கு வாக்களிக்கச்சொல்வதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பலாச்சோலை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:-

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பதினெட்டு இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். நீங்கள் அனைவரும் எதிரணியில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தீர்கள். அதனால் என்ன பயனை அனுபவித்தீர்கள்?
உங்களை எதிரணிக்கு வாக்களிக்கமாறு சொல்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு என்ன அருகதை இருக்கின்றது? அவர்கள் யுத்தத்தில் தங்கள் உறவுகளையோ அல்லது சொத்துக்களையோ இழந்தார்களா? நீங்கள்தான் உங்கள் குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்தீர்கள். அவர்கள் கொழும்பிலிருந்துகொண்டு கிடைக்கின்ற வசதிவாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு உங்களை எதிரணிக்கு வாக்களிக்கச் சொல்கின்றார்கள்.

இனத்துவேஷம் பிடித்த கட்சிகளே எதிரணியில் இணைந்திருக்கின்றன. அவர்களுக்கு நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும்? சம்பந்தன் ஐயா அவர்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு மிக ந்pண்ட காலம் எடுத்து எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றார்.

நீங்கள் மானமுள்ள தமிழர்களாயின் ஏன் ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு ஆதரவு வழங்கினீர்கள்? என்று அவர்களிடம் கேளுங்கள். நமக்கு மைத்திரிபால சிறிசேனவையோ அவரது கொள்கைகள் பற்றியோ எதுவும் தெரியாது. கிடைக்கப்போகும் பலாக்காயைவிட கிடைத்திருக்கும் களாக்காய் பெரிது என்றொரு பழமொழி இருக்கின்றது. எங்களுக்கு கிடைத்திருக்கின்ற மகிந்த ராஜபக்ச போதும். ஏனென்றால் இங்கு அபிவிருத்திகள் நடக்கின்றன. பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்..

தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியி;ன் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருமளவு பணங்களைப்பெற்றுக்கொண்டே மைத்திபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார்.

வடக்கில் மீள்குடியேற்றம் சிறப்பாக முறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மிகவும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நம்மது குழந்தைகள் கல்வியில் சாதனை படைக்கின்றனர்.இந்த யுத்தம் இந்த நாட்டில் நடைபெற்றிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா என்பதை நீங்கள் சந்தித்துபார்க்கவேண்டும்.அவ்வாறு யுத்தம் செய்திருந்தால் எமது பிள்ளைகள் புத்தகத்துக்கு பதிலாக ஆயுதங்களை தூக்கிச்செல்லும் நிலையே ஏற்படும்.

நாங்கள் எமது மாவட்டம்,எமது குடும்பம் போன்றவை தொடர்பிலேயே சிந்திக்கவேண்டும். நாங்கள் இன்று சகல வளங்களும் பெற்ற மக்களாக வாழ்கின்றோம்.எமக்கு மாற்றம் தேவையில்லை.மாற்றத்தினை கூறி இங்கு வருபவர்கள் தங்கள் சுயநலம் கருதியே வருகின்றனர்.

சம்பந்தன் ஐயா என்ன நோக்கத்துக்காக மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கினார் என்பது யாருக்கும் தெரியாத நிலையே உள்ளது.எந்தவித உடன்படிக்கையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளார்.மைத்திபால யார் அவர்களது உறவினரா.இவை எல்லாம் தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு மீண்டும் இவர்கள் வந்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் நீங்கள் அவதானமாக இருங்கள்.இவர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறுவதற்கு எந்த அருகதையும் இல்லை.இவர்களுக்கு தமிழ் மக்கள் மீது பற்றோ பாசமோ இல்லை.தங்களது இருப்பினை தக்கவைப்பதற்காகவும் தங்களது பைகளை நிரப்புவதற்காகவுமே இவ்வாறு கூறுகின்றனர்.
 

No comments:

Post a Comment