Tuesday, January 06, 2015
இலங்கை::தமிழ்ப் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சிகருமான சுந்தரம் அமைநாயகம் நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
யாழ். மாவட்டத்தில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,000 உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். 44 வாக்குகெண்ணும் நிலையங்களில் 2,000 உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் 2,000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு 5 நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலதிகமாக சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டடுள்ளது.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அந்த இடங்களில் பதிவு செய்து கொள்ளலாம். அதில் பொலிஸாரும் எமது தேர்தல் உத்தியோகஸ்தர்களும் இணைந்து கடமையாற்றுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் நடமாட முடியாதவர்களுக்கும் விசேட ஏற்பாடாக சகல பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளது. வைத்திய சான்றிதலையும் கிராம அலுவலரின் சிபாரிசையும் சமர்ப்பித்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தலின் போது, 150 அரச வாகனங்களும் 150 தனியார் வாகனங்களும் 70க்கும் மேற்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன. சாதாரண போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதுக்கு குறித்த போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளோம்.
பாதுகாப்பு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் பிரதி பொலிஸ் மா அதிபர், ஏனைய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் வாக்குகெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு, நடமாடும் பொலிஸ் சேவை தொடர்பாக விரிவான கலந்துரையாடப்பட்டதுடன், வாக்குகெண்ணும் நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் தொடர்பான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன். அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அரச உத்தியோகஸ்தர்களும் தமது கடமைகளை சரிவர செய்வதன் மூலம் நீதியான தேர்தலை நடத்த முடியும். எனவே ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும்

No comments:
Post a Comment