Tuesday, January 6, 2015

பணத்தை எங்கே பதுக்கினீா்கள்? கூட்டமைப்பு உறுப்பினா் சேனாதிராசாவிடம் பாய்ச்சல்!

Tuesday, January 06, 2015
இலங்கை::யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் வசம் உள்ள உள்ளுாரட்சிமன்றத்தின் முக்கிய உறுப்பினா் மாவை.சேனாதிராசாவுடன் வாயக்கு வாய் தா்க்கத்தில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.
 
குறித்த உள்ளுராட்சிமன்றத்தை வடக்கின் முதலமைச்சா் கலைக்கப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததன் பின்னா் குறித்த உறுப்பினா் சேனாதிராஜாவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உள்ளுாராட்சி மன்றம் பற்றி சில தகவல்களைத் தெரிவிக்க முற்பட்ட போது சேனாதிராசா அதனைக் கேட்காது குறித்த உறுப்பினரை ஏசியதாகவும் இதனையடுத்து குறித்த உறுப்பினரும் சேனாதிராசாவை ”உம்மைப் போல இரண்டாம் தர அரசியல்வாதி நான் அல்ல,
 
ஐ.தே.கவிடம் பணத்தை வாங்கி விட்டு மகிந்தவிடமும் பின்பக்கத்தால் சென்று உதவி பெறும் நீங்கள் எல்லாம் என்னைப் பற்றிக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த எலெக்சனுக்காக ஐ.தே.கவிடம் இருந்து வாங்கிய பணத்தை எங்க வைத்திருக்கின்றீா்கள்? அந்தப் பணத்தை கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினா்களுக்கு பகிர்ந்து கொடுத்தீா்களா?" என பல கேள்விகளை கேட்ட போது சேனாதிராச தொலைபேசியைத் துண்டித்தாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment