Wednesday, January 07, 2015
இலங்கை::தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட பேனாவினால் மாத்திரமே வாக்குச் சீட்டில் புள்ளடியிட முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மது தெரிவித்தார்.
இலங்கை::தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட பேனாவினால் மாத்திரமே வாக்குச் சீட்டில் புள்ளடியிட முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மது தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச் சீட்டுக்கு புள்ளடி இட வைக்கப்பட்டுள்ள பென்சில்களின் எழுத்து சில மணி நேரத்தில் அழிந்து செல்லும் தன்மை கொண்டவை, பென்சில்களினால் அல்லது பேனாவினால் புள்ளடியிடப்பட்டால் வாக்குகள் நிராகரிக்கப்படும் இதனால், தேர்தல் முடிவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது போன்ற செய்திகள் பல்வேறு தரப்பிலும் பரவியுள்ளமை குறித்து பிரதித் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள குறித்த விசேட பேனா வேறு எங்கும் கொள்வனவு செய்ய முடியாது எனவும் , வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல்கள் திணைக்களத்தினால் வைக்கப்படும் கருவிகள் வேறு எவரினதும் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் எனவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ செய்திகளைத் தவிர, பரப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் பொதுமக்களிடத்தில் வேண்டுகோள்விடுத்தார்.
No comments:
Post a Comment