Thursday, January 01, 2015
இலங்கை::இந்திய பிரபல நடிகர் சல்மான் கான் தனது வேலைக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் நிபுணர்கள் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பலிவுட் நடிகர் சல்மன் கான் மற்றும் நடிகை ஜெக்லீன் தம்மை சந்தித்தார்கள்
எனவும், சந்தித்து அவர்கள் சென்றுவிட்டார்கள் எனவும் ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
எதற்காக இலங்கை விஜயம் செய்தீர்கள் என தாம் அவர்களிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது உழைத்த பணத்தில், வறுமையில் வாடுவோருக்கு கொஞ்சம் உதவி செய்யும்
நோக்கில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்தார்கள் என ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ முகாம் ஒன்றை நடத்தி மூக்குக் கண்ணாடிகள் வழங்குகின்றார்கள்
எனவும், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு சென்றதாக புகைப்படங்களை
காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளில் இன்று பொய்யான விடயங்களை பிரசூரிக்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
700 மில்லியன் ரூபா கொடுத்து தாம் சல்மானை பிரச்சாரப் பணிகளுக்காக அழைத்து
வந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என
அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment