Saturday, January 24, 2015

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிதருணங்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய உள்நாட்டு விசாரணைக் குழு!

Saturday, January 24, 2015
உள்நாட்டு யுத்தத்தின் இறுதிதருணங்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய உள்நாட்டு விசாரணைக் குழுவொன்றை அரசாங்கம் அமைக்கவுள்ளது.

அமைச்சரவை  பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரத்தின இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆணைக்குழுவில் தொழில்சார் நிபுணர்கள் அடங்கியிருப்பர், அவர்கள் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் என்ன நடைபெற்றது என்பது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகுழுவை நியமிப்பது தொடாபாக கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறும், விசாரணைகளை மேற்கொள்ளகூடிய தகுதி வாய்ந்தவர்கள் நியமிக்கப் படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment