Saturday, January 24, 2015
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திற்கும்,
அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரதிப்
பொருளாதார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, அமெரிக்கத் தூதரக அதிகாரி அன்றூ
மானுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment