Saturday, January 24, 2015

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வருடாந்த அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது!

Saturday, January 24, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வருடாந்த அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம்  இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்யுமாறு மனித உரிமை கவுன்சில் கேட்டுக்கொண்டது.

மனித உரிமை கவுன்சிலும், பாதுகாப்புச்சபையும் வழங்கிய ஆணையின் படி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள கவுன்சிலின் அமர்வின் போது இந்த அறிக்கை குறித்து ஆராயப்படவுள்ளதுடன், இலங்கை விசாரணைகள்குறித்த அறிக்கையும் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment