Saturday, January 24, 2015

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

Saturday, January 24, 2015
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யும் போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து முக்கிய அவதானம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து குடியேற்றுவதற்கான கோரிக்கையை கடந்த வருடம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்வைத்திருந்தார்.

அதேபோன்று கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இது தொடர்பில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் நரேந்திரமோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் இந்திய பிரதமரும், இலங்கைக்கு விஜயம் செய்யும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment