Friday, January 23, 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கையா? வெற்றிலையா? இன்னும் தீர்மானம் இல்லை: கட்சித் தாவும் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்: சுசில் பிரேமஜயந்த!

Friday, January 23, 2015
இலங்கை::
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதா? இல்லையெனில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதா? என்பது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தவிசாளர் பதவியும், செயலாளர் பதவியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் எமது செய்தி சேகை;கு தெரிவித்தார்.
 
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வேறும் கட்சிக்குத் தாவும் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வேறும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக சத்தியக் கடதாசி வழங்குவது சட்டவிரோதமானது.
 
இவ்வாறு ஆதரவளிப்பது கட்சி விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.
 
வேறும் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இழக்க நேரிடும் என சுசில் பிரேமஜயந்த கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment