Sunday, January 4, 2015

இரு கட்சி ஆதரவாளர்களிடையே மோதல், ஐவர் காயம்!

Sunday, January 04, 2015
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் ஆதரவாளர்களுக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆதரவாளர்களுக்குமிடையில் அரலகங்வில மற்றும் தலுகான ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மோதலில்

வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உறுப்பினர் ஜனக சமரசிங்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதலில் காயமடைந்த இவருடன் இன்னும் நால்வர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்களுக்கும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் அரலகங்வில பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
 
எனினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே மைத்திரிபால சிறிசேன அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment