Sunday, January 4, 2015

4 நாட்களில் மீண்டும் உங்கள் தலைவனாக ஜனாதிபதி!

Sunday, January 04, 2015
இன்னும் நான்கு நாட்களில் எங்கள் நாட்டையும், எமது மக்களையும் காப்பாற்றும் வலுவுள்ள இரட்சகரைப் போன்று விளங்கும் தேசத் தலைவரின் அதியுன்னதமான வெற்றி ஆரம்பமாகப் போகிறது.
* இது சமாதானத்தின் வெற்றி
* இது நாட்டில் இருளைப் போக்கி ஒளியைப் பரப்புவதற்கான வெற்றி
* இது நாட்டை எதிர்நோக்கும் சகலவிதமான பயங்கரவாதத்தையும் பூண்டோடு அழிப்பதற்கான வெற்றி
* இது மக்களின் வெற்றி
* இது தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றி
* இது இன ஐக்கியத்தின் வெற்றி
* இது வெளிநாட்டு நாசகார சக்திகளை அழிப்பதற்கான வெற்றி
* இது விவசாயிகளின் வெற்றி
* இது தொழிலாளர்களின் வெற்றி
* இது பாமர மக்களின் வெற்றி
* இது ஆசிரியர்களின் வெற்றி
* இது அரசாங்க ஊழியர்களின் வெற்றி
* இது சமூகத்தில் உள்ள ஓய்வுபெற்ற பெரியோர்களின் வெற்றி
* இது மாணவர்களின் வெற்றி
* இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெற்றி
* இது வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் வேலையற்றோரின் வெற்றி
* இது சாதி, மத இன பேதமின்றி மக்கள் அனைவரும் சமத்துவ உரிமையுடன் சகல சுகபோகங்களையும் அனுபவிப்பதற்கான வெற்றி
* இது இந்நாட்டு மக்களை நோய் நொடியின்றி சுகதேகிகளாக வாழ்விப்பதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கான வெற்றி
* இது ஆயுத படையினர் மற்றும் பொலிஸாரின் நீதி நெறியாக மக்கள் சேவையை ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள வைப்பதற்கான வெற்றி
* இது வெளிநாடுகளில் இலங்கையின் பாரம்பரிய நற்பெருமைகளை மீண்டும் நிலை பெறச் செய்வதற்கான வெற்றி.
* இது உலக நாடுகள் அனைத்துடனும் பாரபட்சமற்ற முறையில் இலங்கையின் நட்புறவை வலுப்படுத்துவதற்கான வெற்றி
* இது ஊழல் மோசடிகள், கைலஞ்சம் வாங்குதல், ஆட்கடத்தல், அரசியல் கொலைகள், ஆயுத கலாசாரம் ஆகியவற்றை குழி தோண்டி புகைப்பதற்கான வெற்றி.
* இது நெல் உற்பத்தியைப் பெருக்கி, இலங்கையை மீண்டும் ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாற்றுவதற்கான வெற்றி.
* இது கடற்றொழிலாளர்கள் எமது கடற்பிரதேசத்தில் வெளிநாட்டவர்களின் தொந்தரவு இன்றி, அமைதியாக மீன்பிடிக்க வைப்பதற்கான வெற்றி.
* இது போக்குவரத்து சேவைகளை - ரயில், பஸ் சேவைகளை பொதுமக்களுக்கு பயன்தரக் கூடிய முறையில் நெறியாக நடத்துவதற்கான வெற்றி
* இது வீதிகள், மேம்பாலங்களை அமைப்பதற்கான வெற்றி.
* இது எமது பாரம்பரிய குளங்கள், வாவிகள் மற்றும் அணைக்கட்டுக்களை புனரமைப்பு செய்து, அதன் மூலம் மின்சார உற்பத்தியையும், நெல் உற்பத்தியையும் பன்மடங்கு பெருக்குவதற்கான வெற்றி.
* இது இலங்கையின் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருக்கும் வெற்றி.
* இது உல்லாசப் பிரயாணத் துறையை நாட்டில் மீண்டும் அமைதி ஏற்பட்டு விட்டது என்ற பிரச்சாரத்தை புயல் வேகத்தில் வெளிநாடுகளில் மேற்கொள்வதற்கான வெற்றி.
* இது உல்லாசப் பிரயாணத் துறையின் மூலம், இந்நாட்டு மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வருமானத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கான வெற்றி.
* இது வடக்கின் வசந்தம் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றப்பட்டு, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தி, அவர்களை குதூகலிக்கச் செய்வதற்கான வெற்றி.
* இது கிழக்கின் உதயத்தின் ஊடாக மக்களின் வாழ்க்கையின் இருளைப் போக்கி ஒளியை பரப்புவதற்கான ஒரு வெற்றி.
* இது தேசத் துரோக மற்றும் நாசகார, நயவஞ்சக சக்திகளுக்கு முற்றாக சாவு மணி அடிப்பதற்கான வெற்றி.
* இது பழிவாங்கும் எண்ணத்தை மக்கள் அனைவரும் மனதில் இருந்து நீக்கி, அமைதியான நல்லெண்ணத்தை நிலைபெறச் செய்வதற்கான வெற்றி.
இறுதியாக அதிர்ஷ்ட லட்சுமியையும் தனலட்சுமியையும் உங்கள் ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வெற்றிலையின் மீது அமர்ந்து, அங்கு நிரந்தரமாக குடியிருக்கச் செய்வதற்கான மக்களுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.
இந்த வெற்றிகளை அடையச் செய்வது உங்களின் கரங்களிலேயே இருக்கின்றது. ஆகவே, சரியாக சிந்தித்து ஒரு நல்ல தலைவருக்கு நீங்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உங்கள் வாக்கை பதிவு செய்து, இதனை மக்களின் வெற்றியாக மலரச் செய்யுங்கள்.

No comments:

Post a Comment