Sunday, January 04, 2015
இலங்கை::இனநெருக்கடிக்கு தீர்வு தேவையென்றால் நாளைக்கே அரசியல் தீர்வொன்றை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
இலங்கை::இனநெருக்கடிக்கு தீர்வு தேவையென்றால் நாளைக்கே அரசியல் தீர்வொன்றை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
ஆனால், தங்களது சொந்த அரசியல் இலாபங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் அலரிமாளிகையில் வாரப் பத்திரிகை பிரதிநிதிகளை சந்தித்து உரையாடிய போதே இந்த விடயங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, இப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டால் தங்களுக்கு அரசியல் செய்ய முடியாது போகும் என்பதால் தீர்வொன்றை காண்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் அக்கறையின்றி செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு என்று வரும் போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான தேவையோ, அக்கறையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிடையாது என்று மகிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இந்தியா அல்லது ஜெனீவா மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தீர்வொன்றை காண்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆர்வம் கிடையாது. ஏனெனில், தீர்வு வழங்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். அதனால், தங்களது அரசியல் தேவைகளுக்கு தான் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு முன்வராமல், பிச்சைக்காரன் புண் போல அதை வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்பினரை சாடினார்.
உங்களது புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு பற்றி எதுவும் விசேடமாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்படி விடயங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி, மேலும் கருத்து வெளியிடுகையில்;
நாளைக்கே வேண்டுமென்றாலும் எம்மால் தீர்வு தர முடியும். ஆனால், அவர்கள் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்) அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்களே வந்து பேசி தீர்வொன்றை காணுமாறும் நாம் அழைப்பு விடுத்தோம். தீர்வு பற்றி பாராளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நாமல்ல. அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதுடன், அதற்கென செயன்முறையொன்றும் இருக்க வேண்டும். 10 அல்லது 20 நாட்களில் முடிக்கும் விடயம் என்றால் நாம் அதை செய்துவிடுவோம். ஆனால், இது நீண்டகாலப் பிரச்சினை. அதற்கொரு செயன்முறை அவசியம்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரும் போது வடக்கு, கிழக்கு பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிடும் என்றார்கள். ஆனால், மக்களின் முன்னிலைக்கோ பாராளுமன்றத்துக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை. அதையும் தாண்டி என்ன செய்ய முடிந்தது. தற்போது ஒருவர் வடக்கை கேட்கிறார் என்றால், மற்றையவர் கிழக்கை கேட்கிறார். இதுதான் நிலைமை என்றார்.
No comments:
Post a Comment