Sunday, January 4, 2015

தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளை எடுத்துள்ளது: பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்!

Sunday, January 04, 2015
இலங்கை::ஹெல உறுமய கூறும் பௌத்தநாடு என்னும் கருத்துக்கு சம்பந்தன் அவர்கள் உடன்பட்டுள்ளாரா என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதியமைச்சரின் சின்னவத்தை பிரதேச இணைப்பாளர் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பெருமளவான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டதுடன் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,
இந்த முறை தமிழ் மக்கள் நிலைமையை நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்துள்ள கூட்டணியை நன்கு ஆராய்ந்துபாருங்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பெரும் இனவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது.

இந்தக்கூட்டணி மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.இன்று தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவுகளை எடுத்துள்ளது.

இன்று மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.என்ன உடன்படிக்கையின் கீழ் இவர்கள் ஆதரவு வழங்குகின்றார்கள்.எந்தவிதமான தகவலும் இல்லை.பணப்பெட்டிகளின் பரிமாற்றத்தினைதொடர்ந்தே இந்த முடிவினை அக்கட்சியில் உள்ள சிலர் எடுத்துள்ளனர்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகள் யாழ் தலைமைகளின் முடிவுகளாகவே அமைந்துள்ளன.மத்திய குழு கூட்டத்துக்கு செல்லும் கிழக்கு மாகாணத்தினை சேர்ந்தவர்கள் தலையை குனிந்து அங்கு கூறுபவற்றை கேட்டுவிட்டு அமைதியாக வருபவர்களாகவே உள்ளனர்.

No comments:

Post a Comment