இலங்கை::கண் மூடித்தனமாக இராணுவத்தினரை நிலைநிறுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இராணுதந்திரோபாயங்களுக்கு அமைவாகவே வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படுவது
தொடர்பிலான தீர்மானங்களை அரசியல் ரீதியாக எடுக்க முடியாது எனவும், அவை நிபுணர்களினால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் காணிகளை வைத்துக்கொள்ள விருப்பமில்லை என்ற போதிலும், தந்திரோபாய காரணங்களுக்காக இவ்வாறு காணிகளில் படையினரை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வேறும் இடங்களில் படையினரை நிலைநிறுத்த முடியாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக வடக்கில் இவ்வாறு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தலைவர் பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திரு. பிரபாகரன் என அழைத்திருந்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment