மைத்திரிபால சிறிசேனாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரசார வேலைகளில் ஈடுபட ரூபா 260 கோடி!!
Sunday, January 04, 2015
Sunday, January 04, 2015
இலங்கை::எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரசார வேலைகளில் ஈடுபட ரூபா 260 கோடி இந்திய உளவுத்துறை ஆர்.சம்பந்தனிடம் கையளித்ததென்று நம்பகரமான தகவல்கள் “” கசிந்துள்ளது.
திரு சம்பந்தன் கடந்த டிசம்பர் 28ம் திகதி வரை புதுடெல்லியில் மூன்று கிழமைகள் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருக்கும் போது இலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது எபபடியென்றும் இதற்காக தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இந்திய
உளவுத்துறையுடன் கலந்தாலோசித்ததாக தெரிய வருகிறது.இவ்வாறான ஆலோசனைகளையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் பிரசாரவேலைகளில் ஈடுபடவேண்டுமென்றும் இந்திய உளவுத்துறை சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டது.
இந்த பிரசார வேலைகளின் செலவுக்காக இலங்கை ரூபா 260 கோடி உளவுத்துறையினர் வழங்கியுள்ளனர்.
பின்னா் இலங்கை திரும்பிய சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை தனது கொழும்பு இல்லத்திற்கு அழைத்து ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் கலந்துரையாடி இந்திய உளவுத்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்று முடிவு செய்தனர்.
கொழும்பிலுள்ள சம்பந்தனின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நியமன உறுப்பினர்கள் எம்.ஏ சுமந்திரனிடம் 50 கோடி வழங்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் 22 கோடியும் ,மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் 18 1/2 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக “ தகவல்” கிடைத்துள்ளது.
இந்த பணப்பங்கீட்டில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை கண்டுகொள்ளவில்லையென்றும் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோருக்கு எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.
இந்த ஆட்சிமாற்ற பணவிவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா “நல்லவரா?” “கெட்டவரா?” விரைவில் அம்பலமாகும்!
கூட்டமைப்பு வந்தது மூன்று மில்லியன்….கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்குழு!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளினை கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் ஒன்பது பேர் யாழ்.வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
எதிர்வரும் மூன்று தினம் வடக்கில் தங்கியுள்ள அவர்கள் கூட்டமைப்பின் முகவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதல் கட்டமாக இக்குழுவினர் வடமராட்சி பகுதியினில் சந்திப்புக்களினை நடத்தியிருந்தனர்.
இதனிடையே மாவட்டமொன்றிற்கு தலா மூன்று மில்லியன் ரூபாவென கூட்டமைப்பிற்கென பிரச்சாரத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட கொடுப்பனவுகள் பிரச்சார வேகத்தை முன்னிறுத்தி வழங்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment