Wednesday, January 07, 2015
இலங்கை::தேர்தல் காலத்தில் பொய்யான வதந்திகளைப் பரப்புவோர் உடனடியாக கைது செய்யப்படுவர் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை::தேர்தல் காலத்தில் பொய்யான வதந்திகளைப் பரப்புவோர் உடனடியாக கைது செய்யப்படுவர் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடும் 61ஆயிரம் பொலிஸாருக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேவையேற்படின் நியாயமான அதிகாரத்தை பயன்படுத்துமாறும், சுடுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமகன் ஒருவரின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயல்களின் போது நியாயமான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும்.
இதேவேளை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 20 மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குழப்பங்களை விளைவிப்போர் மற்றும் வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய சுமார் 20, 000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இருபதாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களில் புலனாய்வுப் பிரிவினரும் உள்ளடங்குதவாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் சிவில் உடையில் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொய்யான வதந்திகளை பரப்புவோர் உடனடியாக கைது செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு மேலதிகமாக சீருடை அணிந்த பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், திடீர் வீதிச் சோதனை சாவடிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தரப்பினர் கைது செய்யப்பட உள்ளனர்
No comments:
Post a Comment