Thursday, January 01, 2015
இலங்கை::கடந்த தேர்தல்களில் எனது வெற்றிக்கு
காரணமாகவிருந்த சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் என்னை விட்டு விலகிச்
செல்லவில்லை என கருதுவதாக ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரரிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தல்களில் எனது வெற்றிக்கு காரணமாக இருந்த சிறுபான்மை சமூகத்தினரின் சில பிரிவினர் வேறு பாதைகளை தெரிவு செய்திருக்கலாம், அதற்காக மக்கள் தன்னிடமிருந்து தனிமைப்பட்டுவிட்டதாக கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005 மற்றும் 2010 தேர்தல்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக தான் வாக்குறுதியளித்த போதிலும் அதைவிட முக்கியமான விவகாரங்கள் காணப்பட்டதால் அதனை நிறைவேற்ற முடியவில்லை, பயங்கரவாதத்தை அழித்தல், சமதானத்தை, நல்லிணக்கத்தை, அபிவிருத்தியை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்க வேண்டியிருந்தது, இது குறித்து நான் கவலைப்படவில்லை, இவற்றிற்கு தீர்வு காணமல், நிறைவேற்று அதிகார முறையை நீக்க முற்பட்டிருந்தால் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.
தற்போது இதனை செய்ய கூடிய நிலையிலுள்ளோம்.ஆனால் மிகுந்த அவதானத்துடனேயே அதனை செய்யவேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினாகளை நான் உரிய மரியாதையுடன் நடத்துகிறேன், உரிய முக்கியத்துவத்தை அளிக்கிறேன்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் எனக்கு எதிராக போட்டியிடுவதற்கு கட்சிக்குள் அவர் புறக்கணிக்கப்பட்டதாக கருதுவது காரணமல்ல.
மாறாக அவர் தனக்கான அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்,அதற்காக நீண்ட காலமாக தன்னை கௌரவமாக வைத்திருந்த கட்சியை அவர் கைவிட்டுள்ளார்.
மூத்த உறுப்பினர்கள் அலட்சியம் செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கிறேன், அரசியல் ஆதாயத்திற்காக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது,
யுத்தவெற்றி குறித்து ஐந்து வருடங்களுக்கு பின்னரும் மக்களுக்கு நினைவுபடுத்தவேண்டியுள்ளது,ஏனெனில் அது அவர்களின் வாழ்வில் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்திய விடயம்,இலங்கைக்கு எதிராக செயற்படும் சக்திகள் குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது.
ஆகவே நாங்கள் யுத்தவெற்றியை தேர்தல் பிரச்சார கோஷமாக பயன்படுத்தவில்லை ,என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment