Thursday, January 1, 2015

ஐ.நா. கவுன்சிலில் பாலஸ்தீன தீர்மானம் தோல்வி!

Thursday, January 01, 2015
தன்னுடைய நாட்டில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பாலஸ்தீனம் முன்மொழிந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
 
இஸ்ரேல் ராணுவத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பப் பெறுதல், ஐ.நா.மன்றத்தில் ஓராண்டுக்குள் பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை முன்வைத்து பாலஸ்தீனம் ஒரு தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்தது.
 
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகள் தீர்மானத் துக்கு எதிராக வாக்கு அளிக்காத பட்சத்தில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஒன்பது நாடுகளின் ஆதரவு வேண்டும்.
 
பாலஸ்தீன தீர்மானத்தைப் பொறுத்த வரையில், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் ஆதரவு அளிக்க, அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை எதிர்த்தது. இங்கிலாந்து வாக் களிக்கவில்லை.
 
எனவே இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் பாலஸ்தீனத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment