Thursday, January 01, 2015
இலங்கை::முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து பிரிப்பதற்கு எவராலும் முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு சிலர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே தோல்விகளையே கண்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வரலாற்றில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்தன. இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த முயற்சிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. எனினும் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க எவராலும் எந்த காலகட்டத்திலும் முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நடத்திய மாபெரும் அஸான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முந்தியம் மாலை கொழும்பு தாமரைத்தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விழாவில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:-"அரசு என்ற வகையில் சகல இன மக்களினதும் சகல மதத்தினரினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு கடப்பாடுடையவர்களாகவே இருக்கிறோம். சகல இன மக்களினதும் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கும் அரசு எவ்வேளையிலும் நடவடிக்கை எடுத்தே வந்துள்ளது.பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக அன்று இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்காக மட்டுமல்ல, சர்வதேச நாடுகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுத்தமையை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மறந்து இருக்கமாட்டார்கள்.
அன்று இந்த மக்களுக்காக குரல் கொடுத்தது போன்று எதிர்காலத்திலும் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முன்வருவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சிங்கள, முஸ்லிம் இன ஐக்கியத்திற்கான தேசிய வேலைத்திட்டத்தின் இணைத் தலைவரும் மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான ஆலோசகருமான கலாநிதி அப்துல் காதர் மசூர் மெளலானாவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சவூதி அரேபிய ரியாத் சவூத் பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி அஷ்ஷேய்க் சயீத் அல்கர்னி மற்றும் மன்னர் குடும்பத்தின் சட்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் யெஹியா அல்ராசித் மேல் மாகாண ஆளுநர் அஷ்ஷெய்க் அலவி மௌலானா, அமைச்சர் ஏ.எச்.எம் பவுஸி ,ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் ,முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள்,உலமாக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

No comments:
Post a Comment