Wednesday, January 07, 2015
இலங்கை::அப்துல் காதர் மசுர் மௌலானா – மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகரின் – ஊடகவியலாளர் மாநாடு நேற்று பி.பகல் கொழும்பு கலாதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை::அப்துல் காதர் மசுர் மௌலானா – மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகரின் – ஊடகவியலாளர் மாநாடு நேற்று பி.பகல் கொழும்பு கலாதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்:-
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் 87வது சரத்து முஸ்லீம்களின் மத உரிமை மீறப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லீம்களின் ஹஜ்ஜூப் பெருநாள் காலத்தில் குர்பான் கொடுக்கும் நடவடிக்கைக்கும், அகீகா போன்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இது பெரும் தடையாக அமைந்துள்ளது.
தமிழ் சிங்கள மொழிகளில் இந்த விஞ்ஞாபனம் முரண்பட்ட உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இந்த சரத்தை பொதுவேட்பாளர் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரைகளில் அடிக்கடி கூறிவருகின்றார்.
அளுத்கம சம்பவம் நடைபெறும்போது இந்த மைத்திரிபால அந்தப் பகுதிக்கு வந்தாரா? ஆகக்குறைந்தது அந்த மக்களை பார்த்து ஆறுதல் வார்த்தை சொன்னாரா ? பொலநருவையில் வாழும் முஸ்லீம்களுக்கு உதவினாரா? 300க்கும் மேற்பட்ட முஸ்லீம்களது அரிசி ஆலைகளை சூழல் மாசடைகின்றது என்ற காரணத்தினைச் சொல்லி முடிவிட்டார். அவர்களது சகோதரரின் அரிசி ஆலைகளை விசலாமாக்கி மொத்த வியாபாரம் செய்யும் அளவுக்கு அபிவிருத்தி செய்தார்கள்.
மைத்திரிபால சிறிசேனா மகாவலி அமைச்சராக இருக்கும்போது ஒரு முஸ்லீம் தமிழர்களுக்கு மகாவலிக் காணித்துண்டை வழங்கினாரா ? சுகாதார அமைச்சில் இலங்கையில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் பொலநருவையில் மட்டும் இருந்த 3000 பேருக்கு தொழில் வழங்கியுள்ளார். இதில் எத்தனை முஸ்லீம்கள் தமிழர்கள் எனக் அவரிடம் கேட்க விரும்புகின்றேன்.
இவர்களின் பின்னால் எமது முஸ்லீம் அரசியல்வாதிகள் சென்றுள்ளனர். ஆனால் முஸ்லீம்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க நாளை காத்திருக்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறால் முழு முஸ்லீமும் தவறிழைத்தாக ஆகிவிடும் முஸ்லீம்கள் சற்று சிந்தியுங்கள். என மௌலானா கருத்துக் கூறினார்.
No comments:
Post a Comment