Wednesday, January 7, 2015

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு நல்லாசி வேண்டி நேற்று அலரி மாளிகையில் பிரித் ஓதும் வைபவம்!

Wednesday, January 07, 2015
இலங்கை::
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு நல்லாசி வேண்டி நேற்று அலரி மாளிகையில் பிரித் ஓதும் வைபவம் ஒன்று இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களிலிலிருந்தும் ஆறாயிரத்துக்கும் அதிகமான மகா சங்கத்தினர் இந்த சமய வைபவத்தில் கலந்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு நல்லாசி வழங்கினர்.

கண்டி மல்வத்தை மகாநாயக்கர் வண.நியங்கொட விஜிதசிறி தேரர், பேலியகொடை விந்தியாலங்கார பிரிவனாவின் அதிபர் கலாநிதி வெலிமிட்டியாவே குசலதம்ம தேரர் உட்பட மகாநாயக்க தேரர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதிக்குச்சென்று வழிபட்டார்!
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வரலாற்றுச்சிறப்புமிக்க அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதிக்குச்சென்று வழிபட்டார்.வண.பள்ளேகம ஹேமரதன தேரர் ஜனாதிபதிக்கு பிரித் ஆசிர்வதித்தார்.
வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த ஜய ஸ்ரீ மகாபோதிக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடனும் ஜனாதிபதி அன்புடன் அளவலாவினார்.

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே, முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோரும் ஜனாதிபதியுடன் அங்கு சென்றிருந்தனர்.

No comments:

Post a Comment