Monday, January 5, 2015

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தமது கடமைகளை செய்வார்கள்: நீல்காந்த அப்ரெட்டி!

Monday, January 05, 2015
இலங்கை::வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தமது கடமைகளை செய்வார்கள் என்று தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ நிறுவனத்தின் குழுத் தலைவரும் நேபாள நாட்டின் பிரதம தேர்தல் ஆணையாளருமான நீல்காந்த அப்ரெட்டி தெரிவித்தார்.
 
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடவியலாளர்களு டனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து உரையாற்றுகையில்,
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர் 55 பேர் இம்முறை தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேற்படி 55 பேரும் இன்று முதல் தமது பணிகளை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் பணிகளை ஆரம்பிப்பார்கள்.
 
அவ்வாறே, சில தேர்தல் கண்காணிப் பாளர்கள் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் தமது பணியை ஆரம்பித் துள்ளார்கள். இலங்கையின் நீதி, சட்டம், ஒழுங்குக்கு அமைவாக நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடை பெறுவதற்கு தங்களால் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆசிய தேர்தல் அதிகாரிகள் அமைப்பின் குழுத் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதம தேர்தல் ஆணையாளருமான டாக்டர் சஹாபுதீன் யாகூப் குறைஷி இங்கு உரையாற்றுகையில்;
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஒரு மாவட்டத்திற்கு இருவர் வீதம் நியமிக்கப்படுவர். இவர்களை தேர்தல் ஆணையாளரே நியமிப்பார். எமக்கு எந்தப் பிரதேசத்துக்கு செல்வதென்று தெரியாது என்பதால் அதனைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்கே இருக்கின்றது.
த்துடன் நேற்று எமது பிரதிநிதிகள் தேர்தல் ஆணையாளரையும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும், சுயேட்சைக் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி னோம். அவ்வாறே உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களையும் சந்தித்தோம்.
 
தேர்தல் கண்காணிப்பாளர்களின் பணியானது நாட்டில் இடம்பெறும் தேர்தல் தொடர்பாக அறிக்கை வடிவில் சமர்ப்பிப்பதாகும். ஆனால், எந்தவொரு வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு எமக்கு உரிமையில்லை. ஆனால், எமது கண்காணிப்பு தொடர்பாக இறுதியாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
 
அறிக்கையான முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் மற்றும் இறுதி கட்டம் ஆகியன தொடர்பாக காணப்படும். அந்த அடிப்படையில் எதிர்வரும் 10ம் திகதி எமது அமைப்புகளின் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான முழுமையான அறிக்கை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றார்.
 
தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ நிறுவனத்தின் குழுத்தலைவராக நேபாள நாட்டின் பிரதம தேர்தல் ஆணையாளர் நீல்காந்த அப்ரெட்டியும், ஆசிய தேர்தல் அதிகாரிகள் அமைப்பின் குழுத் தலைவராக இந்தியாவின் முன்னாள் பிரதம தேர்தல் ஆணையாளருமான டாக்டர் சஹாபுதீன் யாகூப் குறைஷி தலைமையில் இரு குழுக்களாக தேர்தலை கண்காணிக்கவுள்ளன.
தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ நிறுவனத்தின் சார்பில் நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான் ஆகிய நாட்டு பிரதிநிதிகளும் இந்தியா, ஆப்கானிஸ்தான், பூட்டான், இந்தோனேசியா, கஸகஸ்தான், மாலைதீவு, மொங்கோலியா, கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாட்டு பிரதிநிதிகள் ஆசிய தேர்தல் அதிகாரிகள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment