Wednesday, January 7, 2015

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

Wednesday, January 07, 2015
ராமேசுவரம்::ராமேசுவரத்தில் இருந்து 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
 
அப்போது அங்கு இலங்கை கடற்படையை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட ரோந்து கப்பலில் 50–க்கும் மேற்பட்ட  வீரர்கள் வந்தனர். இலங்கையில் தேர்தல் நடைபெறுவதையொட்டி இலங்கை கடற்படையினர் அதிக அளவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக படகுகளை கண்டதும் எச்சரிக்கை செய்து உடனே படகுகளை எடுத்துச் செல்லுமாறு கூறி விரட்டினார்கள். இதையடுத்து கடலில் இருந்து அவசர அவசரமாக வலைகளை மீனவர்கள் எடுத்துக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்தனர்.
 
பின்னர்  இந்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து மீனவர்கள் குறைந்த மீன்பாடுடன் நேற்று கரை திரும்பினர். ஆனால் இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் யாரும் புகார் செய்யவில்லை.

No comments:

Post a Comment